search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஹில் ரமணி
    X
    தஹில் ரமணி

    ஐகோர்ட்டு இணையதளத்தில் இருந்து தலைமை நீதிபதி தஹில் ரமணி புகைப்படம் நீக்கம்

    சென்னை ஐகோர்ட்டின் இணைய தளத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் புகைப்படம் இடம்பெற வில்லை. அவரது படத்தை தவிர மற்ற அனைத்து நீதிபதிகளின் படமும் உள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள வி.கே. தஹில் ரமணி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி பதவி விலகல் கடிதம் அளித்தார். இதன் காரணமாக கடந்த 9-ந்தேதி தனது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி விசாரிக்கவில்லை.

    இதனையடுத்து தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த 10, 12, மற்றும் 13-ந்தேதிகளிலும் தலைமை நீதிபதி அமர்வு செயல்படவில்லை.

    கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், ஐகோர்ட்டின் நிர்வாக நடவடிக்கையில் இருந்தும் தலைமை நீதிபதி விலகி இருப்பார் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இணைய தளத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் புகைப்படம் இடம் பெற வில்லை. நீதிபதிகள் பட்டியலில் இருந்த அவரது புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. அவரது படத்தை தவிர மற்ற அனைத்து நீதிபதிகளின் படமும் உள்ளது.

    Next Story
    ×