search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்த காட்சி.
    X
    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் சோதனை நடந்த காட்சி.

    அயனாவரத்தில் கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    அயனாவரத்தில் உள்ள கனிமவளத்துறை அதிகாரில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடியில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி இயக்குனராக சீனிவாசராவ் பணியாற்றுகிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், சவுடு மண் எடுப்பதற்கும், தூர்வாருவதற்கும், செங்கல் சூளையில் மணல் சேமித்து வைக்கவும் இந்த அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.

    இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், போலி பில் தயாரித்து, அதிகமாக சவுடு மண் எடுப்பதாகவும் ஏராளமான புகார்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் பிரேசில், கணேசன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை, 4 மணிக்கு கனிமவளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

    அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். பின்னர் அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குனர் சீனிவாச ராவ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல கேள்விகளை விடிய விடிய கேட்டறிந்தனர். இந்த சோதனை இன்று காலை 7.20 மணி வரை நடந்தது.

    இந்த சோதனையில் சீனிவாசராவின் கைபேசி மற்றும் 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் வீடு சென்னை அயனாவரத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    Next Story
    ×