search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    நீர் பிடிப்பில் மழை நின்றது - பெரியாறு அணை நீர் மட்டம் குறையும் அபாயம்

    நீர் பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்று விட்டதால் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக பெரியாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது. சுமார் 3,700 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் அணையின் நீர் மட்டமும் கிடுகிடு என உயர்ந்து 132 அடியை எட்டியது.

    ஆனால் அதன் பிறகு மழை படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது முற்றிலும் நின்று விட்டது. இதனால் நீர் வரத்து குறைந்ததுடன் நீர் மட்டமும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்படுகிறது. மழைப் பொழிவை பொறுத்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.15 அடியாக உள்ளது. வரத்து 741 கன அடி. திறப்பு 1690 கன அடி. இருப்பு 4756 மில்லியன் கன அடி. வைகை அணையின் நீர் மட்டம் 54.76 அடி. வரத்து 1302 கன அடி. திறப்பு 960 கன அடி. இருப்பு 2680 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.30 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 84.95 அடி.

    Next Story
    ×