என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து- இளம்பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்12 Sep 2019 2:48 PM GMT (Updated: 12 Sep 2019 2:48 PM GMT)
சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் மீது பேனர் விழுந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×