என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே 20 அடி பள்ளத்தில் விழுந்த கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்12 Sep 2019 12:28 PM GMT (Updated: 12 Sep 2019 12:28 PM GMT)
தக்கலை அருகே நடந்து சென்ற போது கட்டிட தொழிலாளி ஒருவர் எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தக்கலை:
தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 57). கட்டிட தொழிலாளி.
ராயப்பனின் மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும் மகளை பார்க்க சென்றார்.
மாலைவரை அங்கு தங்கியிருந்த ராயப்பன், பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார். பஸ்சில் தெங்கன்குழி வந்திறங்கிய ராயப்பன் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
வீட்டிற்கு செல்லும் பாதையில் ரெயில்வே பாலம் தாண்டியதும் 3 அடி அகலமே கொண்ட குறுகிய பாதை உள்ளது. பாதையின் ஒரு புறம் 20 அடி ஆழ பள்ளமும் காணப்படுகிறது.
இந்த பாதை வழியாக ராயப்பன் நடந்து சென்ற போது எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பள்ளத்திற்குள் இருந்து ராயப்பன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இறங்கி ராயப்பனை மீட்டனர். பின்னர் அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்றிரவு ராயப்பன் பரிதாபமாக இறந்து போனார். ராயப்பன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரத்னாபாய் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ராயப்பன் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் பற்றி ரத்னபாய், தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார், ராயப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Next Story
×