search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பேருந்தில் தீ
    X
    பேருந்தில் தீ

    பெருங்களத்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    பெருங்களத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    சென்னை:

    சென்னை பெருங்களத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து இன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் அதில் பயணம் செய்த மாணவர்கள் அலறியடித்து அதிலிருந்து இறங்கினர்.

    சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அருகில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
    Next Story
    ×