search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நீலகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 2 முதியவர்கள் கைது

    நீலகிரியில் 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 முதியவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள அரசு பள்ளியில், 5-ம் வகுப்பு படித்து வந்த, 2 மாணவிகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர், மிட்டாய், கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து, அவர்களிடம் செல்லமாக பேசினர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து யாரிடமும் கூற கூடாது என்று சிறுமிகளை மிரட்டினர். இதனால் பயந்துபோன சிறுமிகள் வீட்டில் யாரிடமும் கூறவில்லை.

    இந்நிலையில், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில், நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தாசய்யா (63), கிருஷ்ணன் (73) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து முதியவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×