என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்- பெற்றோர் போலீசில் புகார்
Byமாலை மலர்12 Sep 2019 11:40 AM GMT (Updated: 12 Sep 2019 11:40 AM GMT)
கல்லூரிக்கு சென்ற மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான நல்லாவூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திவ்ய பாரதி (வயது 19).
இவர், புதுவை பாக்க முடையான்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று திவ்யபாரதி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யபாரதி இல்லை. இதையடுத்து முருகன் தனது மகள் மாயமானது குறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தனது மகள் திவ்யபாரதியை அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×