search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஊட்டியில் மீண்டும் மழை

    ஊட்டியில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, பந்தலூர்,கூடலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை இல்லை. வெயில் அடிக்க தொடங்கியது.

    இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்த நிலையில் ஊட்டியில் நேற்று மதியம் ஒரு மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மிதமான மழை பெய்தது. இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குன்னூரில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. 2 மணி முதல் 4 மணி வரை இந்த மழை நீடித்தது. இன்று காலை சாரல் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மிதமான மழை பெய்தது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    திருப்பூர்-24, அவினாசி-15, காங்கயம் 12.50, தாராபுரம்-2, உடுமலை-1.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    ஊட்டி - 5.4, நடுவட்டம் -6, கிளன்மார்கன் - 2, அவலாஞ்சி -5, கெத்தை - 2, அப்பர் பவானி- 7, குன்னூர் - 7, பர்லியாறு - 11, கோத்தகிரி - 6, கூடலூர் - 36, தேவாலா - 102.

    Next Story
    ×