search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவலாக மழை

    கும்பகோணம் அடுத்த அணைக்கரையில் கனமழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 155 மி.மீ. அளவுக்கு மழை அளவு பதிவானது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று மாலை வரை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இரவில் மிதமான அளவில் மழை பெய்தது. இதனால் தஞ்சையில் குளுமையான சீதோஷ்ணம் ஏற்பட்டது.

    இதேப்போல் கும்பகோணம் அடுத்த அணைக்கரையில் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இங்கு நேற்று ஒரே நாளில் 155 மி.மீ. அளவுக்கு மழை அளவு பதிவானது.

    இதேப்போல் திருவிடைமருதூர், திருக்காட்டுபள்ளி, மஞ்சலாறு, வல்லம், பூதலூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்தநிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.


    Next Story
    ×