என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயநல்லூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
Byமாலை மலர்12 Sep 2019 6:48 AM GMT (Updated: 12 Sep 2019 6:48 AM GMT)
சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
மதுரை விளாங்குடி, சொக்கநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சமயநல்லூருக்கு புறப்பட்டார்.
பின்னர் இரவு 8.30 மணிக்கு திருப்பதி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கட்டப்புளி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருப்பதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருப்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×