என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
Byமாலை மலர்12 Sep 2019 6:42 AM GMT (Updated: 12 Sep 2019 6:42 AM GMT)
திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் பள்ளிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் ஒரு மாதமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி மேற்பார்வையில் பள்ளிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் வீடுகள் தோறும் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம், திருவள்ளூர் நகராட்சியில் உள்ள நகராட்சி, அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெறும் 39 பள்ளிகளில் 23 ஆயிரத்து, 817 மாணவ- மாணவியருக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இரண்டு கட்டமாக இந்த பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளிடம் பேசினார்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசு, நல்ல தண்ணீரில் தான் வளரும். எனவே வீடுகளில், தேவையற்ற தேங்காய் மட்டைகள், ஓடுகள், காலி பாத்திரம், பழைய டயர்கள் என தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இதை உங்கள் பெற்றோரிடமும் அருகில் வசிப்போரிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கூறினார்.
பின்னர் மாணவ- மாணவிகளுக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு மாணவர்களுக்கு, தலா 15 மில்லி வீதம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் செல்வி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், வெயில்முத்து, ராமகிருஷ்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

Next Story
×