search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்

    மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக தனது பரோல் காலத்தை மேலும் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத கால பரோலில் வந்தார். கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பரோல் காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்றம்

    அவர் தனது மனுவில், இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது பரோல் காலத்தை நீட்டிக்கும்படி கூறியுள்ளார். மாமியாருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், இந்தியாவற்கு வருவதில் தாமதம் ஆவதாகவும், இம்மாத இறுதியில் அவர் இந்தியா வருவார் என்றும் நளினி கூறியுள்ளார்.

    நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் நளினியின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 
    Next Story
    ×