search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சாந்தா தலைமையில் பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கிய காட்சி
    X
    கலெக்டர் சாந்தா தலைமையில் பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கிய காட்சி

    பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் - கலெக்டர் சாந்தா வழங்கினார்

    சமூக நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, சத்தியவாணி முத்து அம்மையார் விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 விதவை பெண்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற 5 பெண்களுக்கும் என மொத்தம் 10 பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக 2017-18-ம் ஆண்டிற்கான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசின் இணை மானிய தொகையாக தலா ரூ.15 ஆயிரம் வீதம் 16 பெண்களுக்கு விதவை உதவித்தொகை, 19 பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, 13 பெண்களுக்கு மருத்துவ உதவித்தொகை, 10 பேருக்கு கல்வி உதவித்தொகை, 67 பேருக்கு சிறுவணிகம் மற்றும் பொருளாதார உதவித்தொகை என 130 பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல அலுவலர் விஜயன், சமூக நலத்துறை அலுவலர் ரேவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×