search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த வக்கீல்கள்.
    X
    கோவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த வக்கீல்கள்.

    கோவையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தஹிலராமாணீ. இவர் மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு செல்ல மறுத்த நீதிபதி தஹிலராமாணி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

    இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களில் கூட்டு குழுவினர் நீதிபதி தஹிலராமாணீயை மீண்டும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு நாள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் மற்றும் மதுக்கரை பகுதிகளில் உள்ள கோர்ட்டை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் பணிக்கு வராததால் ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்தது. 

    திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்னை நீதிமன்றம், குமரன் ரோட்டில்  உள்ள கூடுதல் நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இன்று கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல நீலகிரி மாவட்டத்திலும் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×