search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X
    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    தலைமை நீதிபதி மாற்றம்: மதுரையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாறுதலை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மதுரை:

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போதைய மேகாலய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தலைமை நீதிபதி இடமாறுதலை கொலிஜீயம் திரும்ப பெற வேண்டும், காஷ்மீர் மாநில தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்த வேண்டும், நீதித்துறையில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

    உயர்நீதி மன்ற மதுரை கிளை மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்ற கூடிய வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, கொலிஜியம் தனது முடிவை மாற்றி தலைமை நீதிபதியின் இடமாறுதலை திரும்பபெறும் வரை போராட்டம் நீடிக்கும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து வியாழக்கிழமை பொதுக்குழு கூடி முடிவு செய்வோம் என்றார்.

    Next Story
    ×