search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    டெங்கு காய்ச்சல் பீதி - திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் உஷார்

    டெங்கு காய்ச்சல் பீதி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஏடீஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரில் இந்த கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் தென்னை மட்டை, டயர் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு அதிக அளவில் இருந்தது. குறிப்பாக பழனி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உள்பட சிலர் உயிரிழந்தனர். தற்போது சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    காய்ச்சல் கண்டவர்கள் ஆஸ்பத்திரியில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். கிராமப் பகுதிகளில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    நிலவேம்பு கசாயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சல் கண்டவர்களை தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×