search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீசாருக்கு கொலை மிரட்டல் - 17 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    திருப்பூரில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 17 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஒருகிளப்பில் சூதாடுவதாக திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், முருகேசன், போலீசார் ராமர், கணேசன், சிவாயரத்தினம், அன்பரசு ஆகியோர் கொண்ட தனிப் படையினர் சம்பந்தப்பட்ட கிளப்புக்கு சாதாரண உடையில் உள்ளே சென்றனர்.

    அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந் தவர்கள் போலீசாரை தாக்க முயன்றதுடன், கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும்திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த கும்பலை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த குட்டி (வயது 29), கிளப் பொறுப்பாளர் மற்றும் திருப்பூரை சேர்ந் த சிவக்குமார்(35), ராதாகிருஷ்ணன் (31), ஞானவேல் (42), பிரபுராஜ் (33), அமுதராஜன் (36), ஹரீஷ் (36), பாலமுருகன் (21), சுரேஷ்பாபு (39),

    செல்வராஜ் (45), ராஜா (33), வரதராஜன் (30), சக்திவேல் (42), திருமூர்த்தி (48), சுப்பையா (42), சங்கர் (50), செல்வம் (52) என்பது தெரியவந்தது.

    பிடிபட்டவர்கள் மீது பணம் வைத்து சூதாடியது, பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து தாக்க முயன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 870 பணம் மற்றும் 7 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×