search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடைக்கப்பட்ட கிடந்த விநாயகர் சிலை
    X
    உடைக்கப்பட்ட கிடந்த விநாயகர் சிலை

    தக்கலை அருகே விநாயகர் சிலை சேதம் - 2 வாலிபர்கள் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு

    தக்கலை அருகே விநாயகர் சிலை சேதம் அடைந்த சம்பவம் குறித்து 2 வாலிபர்கள் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தக்கலை:

    நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே இச்சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தக்கலையை அடுத்த சரல்விளையை சேர்ந்த மோதிலால் என்பவரும் உரிய அனுமதி பெற்று அப்பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருந்தார்.

    இந்த நிலையில் மோதிலால் பிரதிஷ்டை செய்திருந்த விநாயகர் சிலை திடீரென சேதம் அடைந்திருந்தது.

    இது தொடர்பாக மோதிலால் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த சிமியோன் (வயது 24), கிதியோன் (22), குமார் (48) ஆகிய 3 பேர் சிலையை சேதப்படுத்தியதாகவும், இது தொடர்பாக தங்களை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் புகார் கூறப்பட்ட 3 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 295, 294 பி, 506(1) ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இதில் சிமியோன், குமார் ஆகியோர் சிக்கினர். கிதியோன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×