search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான தாஸ் கலந்து கொண்டார்.

    அப்போது தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அரசு குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்திட வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

    நல்லாசிரியர் விருதினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற காரணத்தால் வழங்காமல் போனது உண்மையான உழைப்பை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அது ஏமாற்றத்தை தருகிறது. புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.

    Next Story
    ×