search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலை
    X
    விநாயகர் சிலை

    ஊட்டியில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு

    கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் இன்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
    ஊட்டி:

    நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலும் இந்து முன்னணி, இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

    தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. 2-வது நாளாக நேற்று இந்து முன்னணி சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட 148 விநாயகர் சிலைகள் தேவாங்கர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சாகர் அணையை அடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தை சற்குரு ஆசிரம குருபிரகாஷ் சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மேள தாளம் முழங்க ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், விழா குழு தலைவர் பட்டாபிராமன், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் கோத்தகிரி பகுதியிலும், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மற்றும் இந்து நல முன்னணி சார்பில், பூஜிக்கப்பட்ட, 80 சிலைகள் டானிங்டன் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, உயிலட்டி நீர் வீழ்ச்சியில் கரைக்கப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் சரவணகுமார், அனுமன் சேனா நிர்வாகி மோகன்ராஜ், மாநில பொது செயலாளர் சிவஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, குன்னூரிலும், இந்து முன்னணி பிரதிஷ்டை செய்யப்பட்ட 119 சிலைகள் லாஸ் நீர் வீழ்ச்சியில் கரைக்கப்பட்டது.

    Next Story
    ×