search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிநாய்கள் கடித்ததில் பலியான செம்மறிஆடுகள்.
    X
    வெறிநாய்கள் கடித்ததில் பலியான செம்மறிஆடுகள்.

    கழுகுமலை அருகே வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலி

    கழுகுமலை அருகே வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கழுகுமலை:

    கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் மேல தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் உள்பட 18 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு அவரது ஆட்டு தொழுவத்தில் சுமார் நான்கிற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின.

    இதில் 1 வெள்ளாடு மற்றும் 12 செம்மறி ஆடுகள் உள்பட 13 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. மீதியுள்ள 5 ஆடுகள் காயமடைந்தது. ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு வந்த வசந்தகுமார் அங்கிருந்த நாய்களை அடித்து விரட்டினார். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 90 ஆயிரம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து கழுகுமலை கால்நடை மருத்துவர்கள் ஆடுகளை பரிசோதித்ததில் வெறிநாய்கள் கடித்ததால் ஆடுகள் பலியானது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    வேலாயுதபுரம் பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் உள்பட அனைவரும் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே வெறிபிடித்த நாய்களை பிடித்து செல்ல பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி வசந்தகுமாருக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×