search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி
    X
    காய்கறி

    ஊட்டியில் காய்கறி, பூக்களின் விலை அதிகரிப்பு

    ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் காய்கறி மற்றும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    ஓணம் பண்டிகை வரும் 11-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. கேரளா மக்கள் கொண்டாடும் இந்த விழாவுக்கு நீலகிரியில் ஆண்டுதோறும் காய்கறி மற்றும் பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் வழக்கம்போல் காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டது.

    தற்போது நன்கு விளைந்து அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முட்டைக்கோஸ், கேரட், காலிபிளவர், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவைகளை அதிகளவு பயன்படுத்துவார்கள். இது தவிரமலை பீன்ஸ், பட்டாணி, பூண்டு ஆகியவைகள் கேரளாவுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அத்தப்பூ கோலமிட பல வண்ண பூக்கள் தயாராகி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் கேரளா வியாபாரிகள் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். தேவை அதிகரித்துள்ளதால் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

    Next Story
    ×