search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசிய காட்சி
    X
    பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசிய காட்சி

    ‘ரூட் தல’ மாணவர்கள் 25 பேர் கண்டுபிடிப்பு - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    திருவள்ளூர் மாவட்டத்தில் ‘ரூட் தல’ மாணவர்கள் 25 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8-ம், 9-ம் வகுப்பு மாணவர்களை, மாணவர் காவல் படையில் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு திருவள்ளூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர் காவல் படையில் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இனிமேல் கஞ்சா வழக்குகளில் கைதாவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும். ‘ரூட் தல’ என்ற பெயரில் சென்னையில் ரகளையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 கல்லூரி மாணவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதோடு அவர்களது பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளோம். ‘ரூட் தல’ மாணவர்களை கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×