search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
    X
    தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

    குமரியில் மழை நீடிப்பு 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    சுசீந்திரம் அருகே கற்காடு, பூதப்பாண்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டியது. நேற்றும் மழை நீடித்தது. காலையில் லேசாக தூறி வந்த மழை இரவில் கொட்டி தீர்த்தது. கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் இரவு கனமழை பெய்தது. நாகர்கோவிலிலும் இரவு மழை பெய்து கொண்டே இருந்தது.

    இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, இரணியல், குளச்சல் உள்பட அதன் புறநகர் பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

    குழித்துறை ஆறு, பழையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தென் னந்தோப்புகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் மழையினால் சரிய தொடங்கி உள்ளது. சுசீந்திரம் அருகே கற்காடு, பூதப்பாண்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தோவாளை, செண்பகரா மன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

    ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சாமித் ப்பு, பால்குளம் பகுதியில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×