search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை-டேராடூன் விரைவு ரெயில் நாளை ரத்து

    மதுரை-டேராடூன் இடையேயான விரைவு ரெயில் நாளை (புதன்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
    மதுரை:

    மதுரை-டேராடூன் இடையேயான விரைவு ரெயில் நாளை (புதன்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) இரவு 11.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண்:12687), வாரம் இருமுறை இயக்கப்படும். மதுரை-டேராடூன், சண்டிகர் விரைவு ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல நாளை இரவு 7.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண்.12641) வாரம் இருமுறை இயக்கப்படும். கன்னியாகுமரி- நிஜாமுதீன் (வழி: நெல்லை, மதுரை விரைவு ரெயில்) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×