search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    போராட்டம், போராட்டம் என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? -தமிழிசை

    பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில்,  வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட முக்கிய நகரங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:

    நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் சிறிய வங்கி கிளைகள் அனைத்தையும் மூடி விடுவார்கள். இதுவரை ஸ்டேட் வங்கியில் 7 ஆயிரம் கிளைகளை மூடி உள்ளனர். பெரும் முதலாளிகளுக்கு கடன் கொடுப்பதற்கு வசதியாக வங்கிகளை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. எனவே வங்கி இணைப்பை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று மாலை லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் அந்தந்த ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ‘கறுப்பு பேட்ஜ்’ அணிந்து ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள்’ என கூறினார்.

    இந்நிலையில் வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்த இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்?.

    போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.   

    Next Story
    ×