search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.கே.எஸ் இளங்கோவன்
    X
    டி.கே.எஸ் இளங்கோவன்

    திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக மீண்டும் டி.கே.எஸ் இளங்கோவன் நியமனம்

    திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    இதற்கு கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதே காரணம் என தகவல்கள் வெளியாகின.

    திமுக

    இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகத்தின் செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க.தமிழ்ச்செல்வன், நெசவாளர் அணி செயலாளராக கே.எம்.நாகராஜன், இலக்கிய அணி இணை செயலாளராக வி.பி.கலைராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×