search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம்- கே.எஸ்.அழகிரி வரவேற்பு

    தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை கே.எஸ்.அழகிரி வரவேற்றுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் இப்போது பஞ்சம் மற்றும் யுத்தம் ஏற்பட்டுவிட்டதா? ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை பயன்படுத்துவது பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்தான் விளக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறேன். அதேசமயம், ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாடுகள் மூலம் என்ன முதலீடுகள் வந்துள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லை மீறி செல்கிறது. எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை.
    சிதம்பரத்துக்கு மன அழுத்தம் கொடுக்கும் வேலையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×