search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஸ்போர்ட்
    X
    பாஸ்போர்ட்

    விண்ணப்பித்த 6 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் - மதுரை மண்டல அதிகாரி பேட்டி

    விண்ணப்பித்த 6 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க திட்டமிட்டது.

    அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. தற்போது 30-வது சேவை மையம் ராமநாதபுரத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் தென் மண்டல அளவில் 8-வது மையமாகும். தமிழகம் முழுவதும் உள்ள மையங்களை மூலம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 136 கோடி பேர் வசித்து வருகின்றனர். இதில் 6.8 கோடி பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். மத்திய அரசு அனைவரும் பாஸ்போர்ட் பெற சேவை மையத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இந்த சேவை மையம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். மதுரை மண்டல அளவில் பாஸ்போர்ட் பெறுவதில் கன்னியாகுமரி முதலிடத்திலும், ராமநாதபுரம் 2-வது இடத்திலும், சிவகங்கை 3-வது இடத்திலும் உள்ளது.

    ராமநாதபுரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஒரு நாளைக்கு 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு விண்ணப்பம் பெறப்படும். இதன் வரவேற்பை பொறுத்து கூடுதலாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த 6 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×