search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி
    X
    புதுவை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி - புதுவை போலீசார் தீவிர சோதனை

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக புதுவையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளனர். இதனால் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    இதையொட்டி புதுவையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையத்திலும், ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    பயணிகளின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. பெரியகடை போலீசார் ரெயின்போ நகர் சந்திப்பு, செண்பகா ஓட்டல் சந்திப்பு மற்றும் காலாப்பட்டு எல்லையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். இரவில் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை செய்து சந்தேக நபர்களின் விபரங்களை கேட்டறிந்தனர்.

    வடக்கு சரகத்திற்கு உட்பட்ட கோரிமேடு எல்லை, லாஸ்பேட்டை எல்லை பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    Next Story
    ×