search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த டாக்டர்களுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
    X
    சிறந்த டாக்டர்களுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

    சிறப்பாக பணியாற்றிய 500 டாக்டர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ்

    2018-ம் ஆண்டில் சிறப்பாக சேவை புரிந்த 500 டாக்டர்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    சென்னை:

    2018-ம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றிய டாக்டர்களுக்கான பாராட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    விழாவில், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த சேவை புரிந்த டாக்டர்கள் அனுரத்னா, பாரதி, நீலா கண்ணன், ஆனந்தகுமார், அருணாகுமாரி, திருநாவுக்கரசு, சந்திரமவுலீசுவரி, தேவி மீனாள், ஸ்ரீகாந்த், தனபால், சிவஞானம், பாலசுப்பிரமணியன், விடுதலை விரும்பி, பசுபதி, கீதாராணி, முத்தமிழ்செல்வி, பிரபாகரன், மோகன் பிரசாத், செங்குட்டுவன், சென்னியப்பன் ஆகிய 20 பேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கத்துடன் கூடிய ‘சிறந்த மருத்துவர் விருது’ மற்றும் 480 டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சிறந்த சேவை புரிந்த டாக்டர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அவர் வழியில் நல்லாட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் புதிய திட்டங்களை வழங்குவதற்கு தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறார்.

    தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,301 கொடையாளர்களிடம் இருந்து 7,597 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஒரு உற்சாக ‘டானிக்’காக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×