search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்
    X
    துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார். தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையால் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    சென்னை :

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து ராணுவ படைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பென்ஜமின், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    சென்னை அடையாறில் தங்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று(சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

    சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற 31-ந் தேதி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ஜனாதிபதி வருகையால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம் வரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச்செல்ல வந்த அவரது காரையும் விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.
    Next Story
    ×