search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

    காலாப்பட்டு அருகே போலீஸ் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கழுப்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவர் காலாப்பட்டு போலீஸ் நிலையம் அருகே மோட்டார் வாகன உதிரிப்பாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வியாபாரம் முடிந்ததும் லாண்டரியில் சலவை செய்த துணிகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது 6 பேர் கொண்ட கும்பல் போலீசார் என கூறி தேவராஜை வழிமறித்தது. மூட்டையில் மதுப்பாட்டில் கடத்தி செல்வதாக கூறி தேவராஜை அந்த கும்பல் மிரட்டியது.

    பின்னர் கத்தியை காட்டி தேவராஜிடம் இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து தேவராஜ் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கீழ் புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆதவன் (வயது 20) மற்றும் ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த சவுத்ரி (20) என்பதும், இவர்கள் போலீஸ் போல் நடித்து தேவராஜிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆதவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆவார்.

    அதுபோல் சவுத்ரி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×