search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிடிட் கார்டு மோசடி
    X
    கிரிடிட் கார்டு மோசடி

    கார் டிரைவரிடம் வங்கி மேலாளர் போல் பேசி ரூ. 75 ஆயிரம் சுருட்டிய வாலிபர்

    வடபழனியில் கிரிடிட் கார்டு, ரகசிய எண்ணை வாங்கி கார் டிரைவரிடம் வங்கி மேலாளர் போல் பேசி ரூ. 75 ஆயிரம் சுருட்டிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    வடபழனி முத்து கோட்டம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணி. கார் டிரைவர். கடந்த 19-ந் தேதி இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு மர்ம வாலிபர் ஒருவர் பேசினார். அவர் தான் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் என்று தெரிவித்தார்.

    மேலும் மணியிடம் வங்கி கணக்கு பற்றிய விபரங்கள் வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே மணி வேறு ஒரு தகவலுக்காக பலமுறை வங்கியை தொடர்பு கொண்டு இருந்தார். இதனால் உண்மையான வங்கி மேலாளர் தான் பேசுவதாக நம்பிய மணி அந்த நபரிடம் தனது வங்கி கணக்கு விபரங்களை ஒவ்வொன்றாக தெரிவித்தார்.

    கடைசியாக கிரிடிட்கார்டு எண் மற்றும் அதன் ரகசிய பின் நம்பரையும் கேட்டு அந்த நபர் பெற்றுக் கொண்டார். சிறிது நேரத்தில் மணியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சில் ரூ. 75 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணி உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு தனது கிரிடிட்கார்டு கணக்கை முடக்கினார். மர்ம நபர் செல்போனில் வங்கி மேலாளர் போல பேசி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மணி வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் தொடர்பு கொண்ட எண்ணை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×