search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் தண்ணீர் லாரிகள்
    X
    தனியார் தண்ணீர் லாரிகள்

    தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

    தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    தண்ணீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று காலை தொடங்கியது. இதனால் செனனையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
     
    நிலத்தடி நீர் எடுப்பதற்கு ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தண்ணீர் கனிம வளத்தில் சேர்க்கப்பட்டதால் அரசு தவிர தனியாருக்கு உரிமை தரமுடியாது என்று அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    இதன் அடிப்படையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் வழக்குகளுக்கு பயந்து தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே தண்ணீர் எடுக்க முறையாக அனுமதி வழங்கக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. இதையடுத்து, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×