search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    மேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு

    தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    கடந்த மாதம் அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    தமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.

    இப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.

    பொள்ளாச்சி - கும்பகோணம்


    இதுபற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.

    அனவே விரைவில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போது உள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-

    1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.

    மேலும் புதிய மாவட்டங்கள் உருவானால் 36-வது மாவட்டமாக கும்பகோணம், 37-வது மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும்.
    Next Story
    ×