search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் பூத்து குலுங்கிய நீலகுறிஞ்சி பூக்கள்.
    X
    கொடைக்கானலில் பூத்து குலுங்கிய நீலகுறிஞ்சி பூக்கள்.

    கொடைக்கானலில் மீண்டும் பூத்து குலுங்கும் நீல குறிஞ்சி பூக்கள்

    கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி பூ மீண்டும் பூத்தது. குறிஞ்சி பூக்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி பூ கடந்த 2018-ம் ஆண்டு பூத்து அரசு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் பின் 2030 -ம் ஆண்டில்தான் நீல குறிஞ்சி பூ பூக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்பொழுது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நீல குறிஞ்சி பூத்து குலுங்குகிறது.

    இதைதொடர்ந்து இந்த நீல குறிஞ்சி பூக்கள் பராமரிப்பின்றி மற்ற மலர்ச்செடிகளுக்குள் செடிகளாக பூத்து உள்ளது. குறிஞ்சி பூ செடிகளை தனித்துவமாக தெரியுமாறு அந்த பூச்செடிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும், பிரையண்ட் பூங்காவில் குறிஞ்சி பூ எந்த இடத்தில் உள்ளது என்று தெரியாமல் இருப்பதால் குறிஞ்சி பூ பூத்துள்ள இடத்திற்கு செல்லும் வழியை அறியவும், நீலக்குறிஞ்சிப்பூ என்பதை தெரிந்துகொள்வதற்கு ஏற்றவாறு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பூங்கா நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×