search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தாராபுரத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

    தாராபுரத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (45). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் இன்று காலை கிணறு வெட்டுவதற்கான ஆர்டர் பிடிக்க தாராபுரம் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    தாராபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள நால் ரோட்டில் தொழிலாளி ராமன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற அரசு பஸ் தொழிலாளி ராமன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலே பலியானார்.

    இந்த தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். தாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அரசு பஸ் எண்ணை குறித்து கொடுத்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் செய்யாமல் கலைந்து சென்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, தாராபுரம் நால் ரோடு பகுதியில் மேலும் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கூறினர்.

    Next Story
    ×