search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    மதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட மாட்டாது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

    மதுரை மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என்று பல்வேறு சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இது வீண் வதந்தி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருமங்கலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் காளிதாஸ், கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைப்புசாரா நல வாரியத்தை முதன்முதலில் 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 17 நல வாரியங்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நலவாரிய உறுப்பினர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்துக்கு உயர்த்தி தந்தவர் அம்மா.

    தற்போது முதலமைச்சரும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்- அமைச்சரின் சிறப்புகுறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை திட்டத்தில் கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்தார்.

    மதுரை மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என்று பல்வேறு சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இது வீண் வதந்தி ஆகும்.

    வேலூர் போன்ற பெரிய மாவட்டங்களில் கலெக்டர், ஒரு கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 100 கிலோமீட்டருக்கு பயணித்து தான் செல்ல வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் அப்படி இல்லை. எளிதில் கிராமங்களுக்கு கலெக்டர் செல்லலாம்.

    ஆகையால் மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்கும் சூழ்நிலை எழ வில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. ஆகவே இந்த வீண்வதந்தியை யாரும் நம்பவேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×