search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி பாகூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பாகூர்:

    பாகூர் தாசில்தார் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், புதுவை மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி ஏரி, குளம் வாய்க்கால்களை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும்.

    பாசிக் நிறுவனத்தை புத்துயிர் கொடுத்து இடுபொருள் விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும், விதை, நெல்லை தனியார் கம்பெனி மூலமாக விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார், தாமோதரன் முன்னிலை வகித்தார் பொதுச்செயலாளர் கீதாநாதன் கண்டன உரையாற்றினார்.

    மாசிலாமணி, ரவி, ராஜா கலியமூர்த்தி, பெருமாள், அமுதா, ஆறுமுகம், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×