search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    சாலி கிராமத்தில் நூதன முறையில் ஆட்டோ திருடிய டிப்-டாப் வாலிபர்

    சாலி கிராமத்தில் நூதன முறையில் ஆட்டோ திருடிய டிப்-டாப் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு நாராயணா தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் (30).

    தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓலா நிறுவனத்தில் இணைத்து ஓட்டி வந்தார். நேற்றிரவு கிண்டியில் ஒரு டிப்-டாப் வாலிபர் ஏறினார். சாலி கிராமம் அண்ணா தெருவிற்கு போக வேண்டும் என்று ‘புக்கிங்’ செய்திருந்தார்.

    அதன்படி அந்த வாலிபரை ஏற்றிக் கொண்டு ஜாவித் சாலிகிராமம் வந்தார்.

    அங்கு வந்தவுடன் அந்த வாலிபர் சினிமா துணை நடிகையை அழைத்து வர வேண்டும். அதுவரையில் என் நண்பரிடம் பேசிக் கொண்டு இருங்கள் என்று ஜாவித்திடம் கூறினார். அவர் முன்பே செல்போனில் ஒருவரிடம் பேசி உடனே வரும்படி கூறினார்.

    இதற்கிடையில் ஜாவித்தின் ஆட்டோவை வாங்கி கொண்டு துணை நடிகையை அழைத்து வருவதாக கூறி அந்த வாலிபர் சென்றார். சிறிது நேரத்தில் மற்றொரு ஆட்டோ டிரைவர் அங்கு வந்தார்.

    அவரிடம் ஜாவித் விசாரித்தபோது தனக்கும் அந்த வாலிபருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2 முறை என் ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறார். அவர் கூப்பிட்டவுடன் வாடகைக்கு தான் அழைப்பதாக நினைத்து வந்தேன் என்று கூறினார்.

    ஆட்டோ டிரைவர் சொன்ன பதிலை கேட்டு ஜாவித் அதிர்ச்சி அடைந்தார். தனது ஆட்டோவை நூதன முறையில் திருடி சென்று விட்டதை உணர்ந்த அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் வாலிபரை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    Next Story
    ×