search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஞ்ஞானபுரம் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.
    X
    மெஞ்ஞானபுரம் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    நாசரேத்-மெஞ்ஞானபுரத்தில் பலத்த மழை

    நாசரேத் பகுதியில் திடீரென்று பெய்த மழையினால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நாசரேத்:

    நாசரேத் பகுதிகளான பிரகாசபுரம், மூக்குப்பீறி, வகுத்தான்குப்பம், மணிநகர், ஞானராஜ்நகர், வெள்ளமடம், வாழையடி, அகப்பைகுளம் வெள்ளரிக்காயூரணி, நாசரேத் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இடியுடன் ஒரு மணி நேரம் திடீரென்று பலத்த மழை பெய்தது. நாசரேத் ரெயில்வே நிலையம் மெயின் ரோடு, கே.வி.கே. சாமி சிலை அருகே மற்றும் முக்கிய தெருக்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. நாசரேத் பகுதியில் திடீரென்று பெய்த மழையினால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மெஞ்ஞானபுரம் பஜாரில் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×