search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    சேலம் மாநகர் ம.தி.மு.க. மாவட்டம் பெயர் மாற்றம்- வைகோ அறிவிப்பு

    சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர் மாவட்டக் கழகங்களாக இயங்கி வரும் மாவட்டங்கள் இனி சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம் என அழைக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர் மாவட்டக் கழகங்களாக இயங்கி வரும் மாவட்டங்கள் இனி சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம் என அழைக்கப்படும். சேலம் மத்தியம் மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒன்றிய நகரக் கழகங்கள் பின்வருமாறு:-

    சேலம் மாநகர், சேலம் ஒன்றியம், ஓமலூர் ஒன்றியம், ஏற்காடு ஒன்றியம், காடையாம்பட்டி ஒன்றியம், அயோத்தியாபட்டணம் ஒன்றியம், வீரபாண்டி ஒன்றியம்.

    சேலம் மத்தியம் மாவட்டக் கழகத்திற்குப் பொறுப்பாளராக வழக்கறிஞர் ஆ.ஆனந்தராஜ் தொடர்ந்து பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×