என் மலர்

  செய்திகள்

  புள்ளிமான்
  X
  புள்ளிமான்

  திருமங்கலம் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே நாய் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
  பேரையூர்:

  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, நேசனேரி, ரெங்கபாளையம் கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்கள் அடிக்கடி குடிநீர் தேடி, சாலை பகுதிக்கு வருகின்றன.

  அப்படி வரும் சில மான்கள் திருமங்கலம்-விருதுநகர் பைபாஸ் சாலையில் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டுமே 4 மான்கள் இப்படி இறந்துள்ளன.

  இன்று காலை ராயபாளையம் முனியாண்டி கோவில் அருகே, குடிநீர் தேடி புள்ளிமான் வந்தது. அந்தமானை, நாய்கள் விரட்டி, விரட்டி கடித்தன. இதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


  Next Story
  ×