search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை
    X
    சாலை

    ஊத்துக்கோட்டை அருகே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    ஊத்துக்கோட்டை அருகே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சி உள்ளது. இங்கே 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மெயின் ரோட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனி சாலை வழியாக செல்ல வேண்டும். 3 வருடங்களுக்கு முன் இந்த தார் சாலை அமைக்கப்பட்டது.

    தரமான தார்சாலை அமைக்கவில்லை என்று அப்போதே புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை குண்டும் குழியுமாக மாறியது. கிராம மையப் பகுதியில் முழுங்கால் அளவுக்கு சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதில் மழை நீர் தேங்கி உள்ள பள்ளம் வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று 3 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவல கத்துக்கும் அனுப்பட்டன. அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் விளை பொருட்களை ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்து சென்று விற்று வருகின்றனர். சாலை குண்டும் குழியுமாக மாறியதால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×