என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  57வது பிறந்தநாள் - திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.க்கு 57-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.

  திருமாவளவன்

  சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அப்பழுக்கற்ற மதச்சார்பின்மைக்காகவும், ஆரோக்கியமான ஜனநாயகம் தொடர்ந்து செழுமை அடைய வேண்டுமென்பதற்காகவும், இளம் வயதிலிருந்தே இடது சாரிச் சிந்தனையுடன் குரல் கொடுத்து வரும் திருமாவளவன் கலைஞர் மீதும், என் மீதும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீதும், லட்சியங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும், அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருப்பவர்.

  பொதுவாழ்வில் தனித்திறன் படைத்த அவர், மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திடவும், தொடர்ந்து மேலும் பல உயரங்களை அடைந்திடவும், அவர் பல்லாண்டு காலம், உடல் நலத்துடனும் மன வளத்துடனும் நிறைவுடனும், வாழ வேண்டும் என்று எனது இதய பூர்வமான வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  Next Story
  ×