search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. . இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்த படிசென்றனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    விழுப்புரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 8 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    இதேபோல் விடிய விடிய மாவட்டம் முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. செஞ்சியில் மட்டும் 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மயிலம், வானூர், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றி வட்டார பகுதியில் மழை பெய்தது.

    கடலூரில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்தது. இரவு 10.30 மணிக்கு கனமழை கொட்டிதீர்த்தது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், அண்ணாநகர், புதுப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்த படிசென்றனர்.

    கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம் மழை நீரால் குளம் போல் காட்சி அளித்தது. இதேபோல் பண்ருட்டி, திருவந்திபுரம், புவனகிரி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது.
    Next Story
    ×