search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    இறால் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் மறியல் போராட்டம்

    இறால் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. ஊராட்சி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    அப்போது கிராம மக்கள், அதே பகுதியில் செயல்படும் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் இருந்து வெளியேறு கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும்,நிலத்தடி நீர் மாசு அடைவதாகவும் குற்றம் சாட்டினர்.

    மேலும் உடனடியாக அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி செயலாளர் உறுதி கூறினார்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் உட னடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இறால் நிறுவனத்தை முற்றுகையிட்டு பெரியபாளையம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் பெரியபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார் எல்லாபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறால் நிறுவனம் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சந்திர பாபு தலைமையில் நடந்தது. பற்றாளராக மோகன்ராஜ் பங்கேற்றார்.

    கூட்டத்தில் போது, 2018-2019 ஆண்டில் ரூ.30 லட்சத்து 998 செலவு செய்ததற்கு முறையாக கணக்கு இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை கூட்டத்துக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    அப்போது பற்றாளர் மோகன்ராஜ், இது பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கூட்டத்தில் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    Next Story
    ×