search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
    X
    சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

    ராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

    ராமநாதபுரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டடது. இதில் 128 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்டங்களை வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று காலை நடைபெற்றது.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மூவர்ண பலூன் மற்றும் உலக அமைதிக்காக வெண்புறாக்களை கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் சூப்பிரண்டு  ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் பறக்கவிட்டனர். காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தியாகிகளைக் கௌரவித்து, சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 37பேருக்கும், 6 அமைச்சு பணியாளர்களுக்கும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 137 அலுவலர்களுக்கும் நற்சான்று பாராட்டுச் சான்றிதழ்களை  கலெக்டர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,  தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதியோர் உதவித் தொகை,  இலவச வேட்புமனு பட்டா,  விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள்,  மினி டிராக்டர், விசை தெளிப்பான், திருமண நிதியுதவி, தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் ஆம்னி கார், கல்வி உதவித்தொகை, சிறுதொழில் கடனுதவி, மருத்துவ உதவி, முதியோர்  விதவை உதவித்தொகை என மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 84லட்சத்து 80ஆயிரத்து 214 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். 

    ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் ரூசபேஷ்குமார் மீனா. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கோட்டாட்சியர் சுமன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஹெட்ஸி லீமா அமாலினி,கூடுதல் எஸ்.பி.க்கள் லயோலா இக்னேஷியஸ்,தங்கவேல்,  ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவநாதன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலை செல்வம், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர். 

    தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    Next Story
    ×